Map Graph

செல்லூர் (மதுரை)

மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

செல்லூர் (Sellur) என்ற புறநகர்ப் பகுதி, இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலேயே செல்லூர் உள்ளதால், செல்லூரிலிருக்கும் பக்தர்கள் தினமும் கோயிலுக்குச் சென்று வருகின்றனர். செல்லூர், கோரிப்பாளையம் சந்திக்கும் இடத்தில், அழகர்கோயில் சாலை, பனகல் சாலை, ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் சாலை, கல்பாலம் சாலை, பாலம் ஸ்டேசன் சாலை, செல்லூர் சாலை சந்திப்பில், இந்த நூற்றாண்டின் அரசியல் தலைவர்களில் ஒருவரான, 'அரசியல் மற்றும் ஆன்மீகம் எனது இரண்டு கண்கள்' என்று வாழ்ந்து மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவ ஐம்பொன் சிலை ஒன்று உள்ளது. அரசியல் தலைவர்கள் அனைவரும் மரியாதை செலுத்துவது வழக்கம்.

Read article
படிமம்:Sellur_ayyanar.jpgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svg